Ads 468x60px

..

Wednesday, 19 December 2012

பயணிக்கும் நம் நட்பு............!!

உறவே இல்லாமல் வந்த நாம் நட்பெனும் 
உறவை பிறப்பித்தோம்.
இந்த உலகின் சக்தி வாய்ந்த 
அம்சங்களில் ஒன்று நம் நட்பு.
எண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு 
ஏதுமின்றி உருவானது நம் நட்பு.
கூடிப் பழகாவிட்டாலும் மனதால்
ஒன்றுபடுவதே உண்மையான நட்பு.
இனியும் தொடருவோம் உறவு என்ற 
மூன்றெழுத்தில் நம் நட்பு பயணத்தை ...

Friday, 30 November 2012

பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் ...ஒருவனை விரும்பி இருந்தால்
சீதையாக வாழ்ந்திருப்பேன் ...
பலரை விரும்பியதால்
சிதைக்கப்பட்டேன் ...

உறவுகளும் ஏற்கவில்லை...
விரும்பித்தொட்டவனும் ஏற்கவில்லை...

பண்பாடு கலாச்சாரம் என்பது
வார்த்தையில் மட்டுமில்லாமல்
வாழ்க்கையிலும் இருந்திருந்தால்
பாவப்பட்ட நோய் தாக்கி இருக்காது ....?!

Thursday, 22 November 2012

ஏக்கம் ....!!இறைவனிடம் பாசத்தை கேட்டேன்
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான்
பாசத்தை கடைசி வரைக்கும் அனுபவிக்க
உன்னை காதலித்தேன் அதை
உன்னிடம் மறைத்து வைத்தேன்
காதல் கவிதை எல்லாம் தனியே
புலம்பி வைத்தேன் கனவின் தொல்லை
என்று உறக்கத்தை விட்டேன்
நாளை உன்னை பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை அறியாமல்
இரவு இரவெல்லாம் விடியாமல்
நீண்டுகொண்டே இருக்கிறது....!?

Thursday, 4 October 2012

உன் நினைவில்...உன் நினைவில்
இளமை என்னும் இன்பத்தில்
காதல் என்னும் கடலினில் மூழ்கி
தினம் தினம் இறக்கிறேன் நானடா ..

Tuesday, 2 October 2012

நினைவை விட்டு சென்ற கனவு ..


நினைவை விட்டு சென்ற கனவு 
ஏனோ மீண்டும் வந்தது ...
நீ கனவில் வந்தால் கண்விழிக்க 
மறுப்பேன் என்று தெரிந்தும் 
மீண்டும் ஒரு முறை வந்து... 
நீ எனக்குள் இருக்கும் உயிருள்ள 
அதிசயம் எனக்கண்டு ஆசையாக
கட்டி அனைத்து சென்றாயே ..!!!
நேற்றைய கனவுகள் சுமந்து
இன்றைய நாட்களை கடக்கிறேன் நான் ..

Wednesday, 26 September 2012

என் போராட்டம் ..!!மனதில் இருக்கும் சோகங்கலை பகிர்ந்துகொல்ல
எவரும் இல்லாமல் தனிமரம் போல்
தினமும் கனவுகளோடு போராடுகிறேன்
உன்னோடு வாழ ஆசைப்பட்டதால் ...


Wednesday, 5 September 2012

மருந்தில்லா நோய் ....


வாழ்க்கையில் சந்தேகம் 
வாழ்வதில் சஞ்சலம்.
நொடிபொழுதில் வந்த 
சந்தேகத்தால் நாள் கணக்கில் 
தொடர்ந்து மனக்கணக்கில்
விளையாடிக்கொண்டிருக்கின்றது
நிகரற்ற அன்பினாலும்
அளவற்ற காதலினாலும்
உருவானது உன் சந்தேகம்
நீ சந்தேகத்தை தொட்டுவிட்டதால்
நான் என் சந்தோஷத்தை விட்டு விட்டேன் ...! 

Tuesday, 21 August 2012

என் விழிகள்..ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
என் விழிகள் உன்னை தேடுதே....
அந்த நேரம் உன்னை கண்டு விட்டல்
மனமும் என்னை விட்டு பிரிந்து போகுதே ...

Monday, 20 August 2012

நேரங்கள்...என் தனிமை நேரங்கள்
உன் அருகாமையை நினைத்து
ஏங்கும் அழகிய நேரங்கள்..

Sunday, 29 July 2012

ரமலான் என்னும் விருந்தாளி ...!!!!!
வருடத்தில் ஒரு முறை நம்மை தேடி வரும் விருந்தாளி ....!
நம்மை நேர் வழிக்கு கொண்டு செல்ல வந்த விருந்தாளி ....!
விருந்தாளி என்னும் ரமலான் மாதம் வந்ததும் 
சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் ....!
நரகத்தின் வாசல் மூடப்படும்....! 
ஷைத்தான்கள் விலகப்படும்.....! 
ரமலான் மாதம்  ஒவ்வொரு இரவிலும் 
பகலிலும் நரகத்தில் உள்ளவர்களுக்கு 
விடுதலை அளிக்கப்படும் ...!
இத்தகைய விருந்தாளி நம்மை தேடி வரும் ரமலானை 
அன்போடும் மகிழ்வோடும் வரவேற்போம்....!!! 
அல்லாஹ்வின் வழிமுறைப்படி நோம்பு நோற்று 
எல்லாம் வல்ல இறைவனின் அருளினை பெறுவோம் ..!!!!

Saturday, 28 July 2012

வெறுக்க நினைத்ததில்லை .............!!
என் இதயம் வலிக்க எழுதிய ஒரு கவிதை
அதை நீ இமைதிரந்து பார்க்கவுமில்லை
உன் சுவாசம் தேடி வந்த என் இதயத்தை
நீ வரவேர்க்கவுமில்லை
பூவாக இருக்கும் என் பாசம் உன்னை
தேடி வரும் பொழுது நம்பி ஏற்றதுமில்லை
இருந்தும் உதிராத பூக்கள் போல் உன் நினைவுகளும்
என் மனதில் பூக்களாய் அல்ல மரமாய்
வளர்கிறது ...

கனவாகி போகுமோ என் வாழ்கை ....என் இதயம் உன்னை தேடும் பொழுது
நீ என்னுடுடன் இல்லை
என் நினைவு உன்னை தேடும் பொழுது
மட்டும் என்ன்டுடன் இருக்கிறாய்
என் தூக்கம் உன் கனவோடு
என் பயணம் உன் நினைவோடு
என் கவிதை உன் கற்பனையோடு
கற்பனையில் உன்னுடன் அனுதினமும்
வாழ்வதால் நீ என்னுடன் இருந்த நேரங்கள்
யாவும் கற்பனையாகவே தோன்றுகிறது
கற்பனையில் வாழ்கின்ற என் வாழ்கை
கடைசிவரைக்கும் கனவாகி போகுமோ ....

Tuesday, 26 June 2012

அன்புள்ள அன்னையே..


உன் புகழ் பாடிடுவேன் இங்கு நானம்மா
கடவுளின் ஆணைப்படி ( 14 .06 ) என் பிறந்தநாள்
அன்று நான் உன் கையில்...
வாழ்கை வாழ காரணமாக இருந்தவள்
இன்று நான் உயிரில் கலந்த என் உயிர் அன்னை உன் நெஞ்சில் ..
பிறந்தால் இறந்து விடுவேன் என்று தெரிந்தும் பிறந்தேன்
கடவுளை காண நினைத்து உன் கருவறையில் ...
என்னை கருவில் சுமந்த அன்னையே ...
எனக்கு சுவாசம் தந்த அன்னையே....
உன் அறியா வயதில் உன் முதற் பிள்ளையாய்
என்னைச் சுமந்து பெற்றாயே உன் வலி நானறிவேன் ..
உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்
காலமெல்லாம் காத்திடுவேன் உன்னை .
என் இதயத்தில் நிறைந்திருக்கின்ற உன்னை..
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ....


நீயும் ...!!! நானும் !!!!


உனக்காய் காத்திருக்கேன் விழியோரம் வரும் கண்ணீர்த்துளிகளுடன்
உன் வருகைக்கு ஏங்கும் என் இதயத்துடிப்பு நின்றாலும்
பிரிந்து போன உந்தன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என்
கண்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது கனவாக
அல்ல கண்ணீராக ....
புன்னகை என்பது யாருக்கு வேண்டுமானாலும் உதிர்க்கலாம்
ஆனால் கண்ணீர்த்துளிகள் மனசுக்கு அருகில் உள்ளவர்களுக்கு
மட்டுமே உதிர்க்க முடியும் ...
உன் அன்பிற்காக இன்று நானும் ...!!!!!!!!
என் மரணத்திற்காக இனி வரும் நாட்களில் நீயும் .....!!!!!!!!!
 

Sunday, 10 June 2012

இது தான் உன் காதலா ?உன் இதயத்தில் எனக்கு மட்டுமே இடம் என்று நினைத்தேன்
ஆனால் இன்று அவ்விடம் இன்னொருத்திக்கு
சொந்தமானதென்று உணர்ந்தேன் ...
உன் வாய் சொல்லும் பொய் உன் கண்களில் கண்டு
உன் பொய் காதலை உணர்ந்தேன் ...
அகமெல்லாம் பொய் பூசி என்னை காதல் கொண்டாய்
இத்தனை நாள் உன் அருகாமையில் உணராத ஒன்றை
முதல் முதலாய் உணர்ந்தேன்.....
இனிமையாக பேசும் உனது வார்த்தைகளை கேட்டு அன்று மயங்கிக்கிடைந்தேன் ....
நீ கூறிய உன் வார்த்தைக்கு அர்த்தம் இன்று உணர்ந்தேன்......
நீ காமத்தின் பசியில் இருந்ததை தாமதமாய் உணர்ந்தேன் .......
அந்த நிமிடம் வந்த கண்ணீரோடு காதலை கரைத்தேன் ......Wednesday, 6 June 2012

என் உண்மையும்.... உன் பொய்யும் ....உண்மையாக காதலித்தது உன் தவறா ?
                            இல்லை 
காதலித்தது போல் நடித்தது உன் தவறா ?

நீ பேசிய நிமிடங்கள் என் வாழ்வில் மறவா
                          நினைவுகள் ...
உன்னுடன் வாழ்ந்த அந்த காலங்கள் மனதில் 
                    பதிந்த சித்திரங்கள் ...

நீ பேசிய நிமிடங்கள் பொய் என்று தெரிந்தும் 
                     மனம் மகிழுதடா..!
வாழ்ந்த காலங்கள் பொய் என்று தெரிந்ததும் 
                    சித்திரங்கள் சிதறுதடா ..!

     "உனக்கென்ன பாவம் நான் செய்தேன் "

 நீ சொன்னததர்கெல்லாம் தலையாட்டியதா ?
       உன்னை உண்மையாக நேசித்ததா ?
          என்னை உனக்கு கொடுத்ததா ?

            பதில் சொல் என்னவனே ..!
உணவு வந்தபிறகு பசி போனதோ உனக்கு ?!

 மௌனத்தால் என் நெஞ்சை வதைக்காதே .!
            பிரிவால் என்னை சிதைக்காதே.!

                  ஏதோ ஒரு வேகம் ..........
                  ஏதோ ஒரு மோகம் ............

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னே ...!

        நீ வலி தந்து போனதால் உன் நினைவாலே 
                    நான் விழி மூடி சாவேனடா ...!!

என் அன்னையே .!!!உன்னால்தான் நான் நானாக .... 
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ... 
எனக்கு நீ இல்லாமல் போயிருந்தால் ....
நான் ஆறடி நிலம் தேடி போயிருப்பேன் ..

என் கனவுகளை நிஜமக்கியவள் நீ ...
என் கண்ணீரை துடைத்தவள் நீ ...
எனக்கு முதல் சிரிப்பை கற்றுக்கொடுத்தவள் நீ
உயிரை தந்து உயிரை கொடுத்தவளும் நீயே .!

நான் அறிவிழந்து நின்றபொழுது  நல்வழிகாட்டியதும் நீ ...
நேசம் ..பாசம் ...அன்பு ...காதல் ..வாழ்க்கை .. 
இத்தனைக்கும் அர்த்தங்களை .... 
அன்போடு சொல்லிக்கொடுத்தவளும் நீயேதான்...

சுற்றயுள்ள சொந்தங்களை புரிந்து கொண்டது உன்னால் தான் ....
என்னை சுற்றி வந்த துன்பங்களை தூக்கி எறிந்ததும் உன்னால் தான் ...

ஜென்மங்கள் உண்மையானால்.......
அடுத்த ஜென்மம் மட்டுமல்ல.... 
பிறக்கும் ஜென்மங்கள் யாவிலும் ........
நீயே என் தாயாக வரவேண்டும் ....

Tuesday, 29 May 2012

இணைந்திருப்பேன் என்றும் உன்னுடன் ...  • உலகில் உயர்ந்த உறவுகளில்

    சிறந்தது   நட்பு ..

   என்றும் புனிதமானது 


   தான் நட்பு ...

   எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ ...

   நட்பு என்னும் தோட்டத்தில் ராஜா நீ ...

   நீ நடக்கும் தூரமெல்லம் நானும் 


   வருவேன்
   நிழலாக அல்ல உன் நண்பியாக ...

   தந்தையின் அன்பு உன்னிடம் கண்டேன் ..

   என் இடர் கண்டு உன் இதயம் 

   துடிக்கக்கண்டேன் ...

   வாழ்கை என்கிற பெருங்கடலை கடந்திட

   நீ ஒரு துடுப்பாய் இருக்கிறாய் ..

   தோல்வி காண்கையில் தோள் குடுத்து

   தூண் போன்று நிற்கின்றாய் ...

   என் பாதையில் இருட்டென்று 


   தெரிந்தால்...
   இரவிலும் வெளிச்சம் வரும் உன்னால் ...

   பிறக்கும் பொழுது நண்பன் என்று 


   யாருமில்லை எனக்கு...
   இறக்கும் பொழுது நண்பனை தவிர 

   யாருமில்லை என்ற நிலை எனக்கு ..

   என் வெற்றி என் கண்ணீர் என என் 


   அத்தனை நிகழ்வுகளிலும் என்னுடன் 

   எனக்காய் எனதாய் இருக்கும் ஒரு உறவு 

   நீயே ...

Thursday, 24 May 2012

கற்றுக்கொள் ..
வாழ்வில் அனுபவத்தை அனுபவித்து வாழகற்றுக்கொள் ..

அனுபவமே வாழ்க்கையாக வாழ கற்றுக்கொள்ளாதே ...

எல்லாம் உனக்காக ..!!!


என் இதயத்தின் நிழலே ..!!
என்னோடு எப்பொழுதும் இருக்கும் நிழலே ...!!

எல்லாம் உனக்காகா ..!!

உன் பார்வைக்கு உயிர் கொடுக்க
என் பார்வையை இழந்தேன் ...

பார்வையை இழந்ததால்
என் கனவினை இழந்தேன் ...

கனவினை இழந்ததால்
என் நினைவினை இழந்தேன் ...

நினைவினை இழந்ததால்
என் வாழ்க்கையை பாதியில் இழந்தேன் ...


மறு பிறவி .....
என் தோழியே மறுபிறவி என்றிருந்தால் 

உன் குழந்தையாக பிறக்க ஆசைபடுகிறேன் 

உன் மடியில் அனுதினமும் தலை வைத்து 

துயில வேண்டும் ...

கதைகள் பேசி சிரித்த அந்த நொடிகளை 

நினைத்து பார்க்க ..

செல்ல சண்டையிட்டு உன்னுடன் கோபித்து 

கொள்ளும் அந்த நொடிகளை நினைத்து பார்க்க ...


இன்ப களிப்பினிலே......கண்களுக்கு "இன்பம்" நீ கனவில் வரும்பொழுது ...
"பேரின்பம்" வார்த்தையால் உன்னுடன் பேசும்பொழுது ...

தினம் வரும் கனவுகளில் 
உன் நினைவால் முழ்கி கிடைந்தேன் ......
கனவில் மட்டும் வரும் நீ 
நேரில் வரமாட்டாயா என்று நினைத்தேன் .....

உன்னை பற்றி சிந்திக்கும் பொழுது சோகமும் எனக்கு சுகம் தான் ..
நீ என்னருகில் இல்லாவிடில் வெற்றியும் எனக்கு வீண் தான் ...

மானே தேனே நீயேதானே என்று பாடும் நாள் வராதோ 
உன்னை என் தோளில் சுமக்கும் நாள் வராதோ 
இறைவன் எனக்கொரு வரம் தரமாட்டானா என்றிருந்தேன் ..

இன்றோ நீ பிறந்தாய் உயிர் போகும் வலி கூட அமைதியாக ஏற்றுக்கொண்டேன் ..
முதல் குழந்தையின் முதல் உதை இன்பமும் துன்பமும் ஒரேழுத்து 
தான் என்று ஏற்றுக்கொண்டேன் ..

உன் முகம் பார்த்ததும் இன்பக்களிப்பினிலே மூழ்கி
சொர்கத்தை கண்டேன் .... 

Thursday, 17 May 2012

மனம்..!


மனிதனின் மனம் ஒரு காகிதம் போல அதில்
கவிதை எழுதும் கைகளை விட கசக்கி எறியும் கைகளே அதிகம்.

நிலை இல்லா உலகில் நியமில்லா மனித குணமும்
மனமும் மாறுகின்றது...

மூச்சு விட்டுக்கொண்டு இருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..
முயற்சி செய்துகொண்டிருப்பவன் மட்டும் தான் மனிதன் ..

உயிரில்லாதவன் மனிதனில்லை...
உருவம் இருப்பவன் இறைவனில்லை...

இரண்டுமே இல்லையேல் இவ்வுலகமில்லை ...!!!

Monday, 14 May 2012

காதல்..!அன்று
ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் ..........

இன்று
ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில்
காமத்தை கலக்கிறார்கள் ..........

வாழ்வில் ஆட்சி கொண்டவர்கள் காதல் கொள்கிறார்கள்........

காட்சி கொண்டவர்கள் காமம் கொண்டு காதலின் கற்பைக் கொள்கிறார்கள் .

காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று.

அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை.
அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாததே ...!!

காதல் என்பது மறு உலகம் அதில் கடுகளவே காமம் ..!!

காதலும் காமமும் ! உள்ளத்தின் துணை இன்றி போனால் இரண்டிலும் மோதலே !

காதல் -- இரு உயிரின் நெருக்கம்.!!!
காமம் -- இரு உடலின் நெருக்கம்.!!

காதலில் அல்ல காமத்தில் தான் எங்கெல்லாம் காதல் புகுகிறதோ அங்கெல்லாம் வெல்வது காமம் மட்டும்தான் காதல் அல்ல ...

இந்த கால காதலில் காமம் மட்டுமே இருக்கிறது ! ஒரு பூவில் தேனை குடித்துவிட்டு மற்றொரு பூவை தேடுகிறது ! வண்டு ...!!!!Tuesday, 8 May 2012

வருவாயா? என்னவனே....!!?

வெகு தூரத்தில்...
நினைவோடும்.!

வெகு அருகில்...
நிழலோடும்.!

என்னுள் இணையாமலேயே...
எங்கிருக்கிறாய் என்னவனே.!

எனக்குள் என் உயிராய்
இருக்கும் என்னவனே... !

வெட்ட வெட்ட துளிர்விடும்
மரமாய் என்னை மாற்றிவிட்டாய்!!.

நீ என்னை விட்டு விலக ... விலக ...,
 என் காதல் வளர்கிறது!!!

உனக்கான என் கனவுகளுடன்
விழித்துக் கொண்டிருக்கேன் ....

இறுதி வரை உனக்கு பாத
பூஜை செய்ய காத்திருக்கேன் ......

வருவாயா? என்னவனே....!!?

என்னவனே உந்தன் சேதி சொல்லாதோ!
உன்னை எண்ணி இருக்கின்ற கன்னி முகம் பார்க்க கரைதாண்டி வரமாட்டாயா??

Tuesday, 1 May 2012

என்னவனே...!!என் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். 
என் கற்பனையின் முகவரி அவன். 
என்றும் என் கவிதையின் முதல் வரி அவன்.
முகவரி தந்தவனே என் முகம் மறந்ததென்ன. 
என்னை சிந்திக்க வைத்தவனே என்னை பற்றி 
சிந்திக்க மறந்ததென்ன.
முதல் வரி நீ இன்றி முழுமை பெறுமோ என் கவி.
என் இதயம் இயங்கவில்லை இனியவனே நீ இன்றி ..!!வந்து விடு ..!!!
என்னவனே...!!
வாழ்வின் எல்லை வரை நீ வேண்டும்....

Monday, 30 April 2012

வாழ்க தொழிலாளர் தினம்...!!


உழைக்கும் உலகத்தமிழ் நண்பர்கள்அனைவருக்கும் "மே" தின வாழ்த்துக்கள்..உழைப்பாளியின் பெருமை திறமையை 
எடுத்துரைக்கும் நாள் மே ஒன்று 
வாழ்க தொழிலாளர் தினம்...!!

Thursday, 26 April 2012

நீ மௌனமாய் இருந்தாலும்
உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...!!!


பெண் மனம்........! 

பெண்ணின் மனம் எளிதில் பலருக்கு புரிவதில்லை........

ஆசைகளும் வேட்க்கைகளும் பிறருக்காய்
முடமாக்கப்பட்டு இதயத்தின் ஓரத்தில் கிடக்கின்றது...

சமுதாய கோட்பாடுகளில் சிக்கி
தனக்கே ஒரு முள்வேலி அமைத்து வாழ
பழகிகொண்டது...

விண்ணோடு முட்டும் அளவு கொண்ட
வேட்கை எல்லாம் குடும்பத்திற்கென மறைத்துவைக்க பழகி கொண்டது...

இருந்தும் பெண் மனம் கல்லென்று தான்
சொல்லும் கல்நெஞ்சக்காரர்களால் பெண் மனம் நொந்துகொண்டுதான் இருக்கிறது....

அவன் மடி ....சொல்லில் அடங்காத சொர்க்கம் அவன் மடி.
தலை சாய்ந்து விழி மூடி,
தன்னிலை மறந்து ,
அங்கே புதைந்து 
கிடக்க வேண்டும் 
இறுதிவரை...

மன வலி ........உன்னைப் போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்...

இருந்தும் மறுக்க முடியவில்லை... !! ??

உன் மனம் வலிக்கும் என்பதால்...!!

கண்ணீரை அல்ல....!


என்கண்ணில காணவேண்டும்
என்றென்றும் அழகான நம்
காதலை...கண்ணீரை அல்ல....!


மகிழ்ச்சியான நேரத்திற்கு
காத்திருப்பதை விட
இந்த நேரத்தை சந்தொஷமாக்கு ....!
சுமையாக இருக்கும் நேரம் கூட
சுகமாக மாறும் .....!

அவன் நினைவுகள் .........!!பைத்தியமாக நான்
ஆனாலும் எனக்கு
வைத்தியமாக
அவன் நினைவு மட்டுமே
இருக்க முடியும் ..!!

வாய்ப்பு .....!!


வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது ,
கிடைய்த்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது கிடையாது , 
வாய்ப்பு ஒரு முறைதான் வரும் ...!!
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த கற்றுக்கொள் ,
ஒரு முறை வாழ்க்கையை அனுபவித்து வாழ கற்றுக்கொள் ,
தவறிப்போன வாய்புக்கள் கடந்து போன நிமிடங்கள் ..!!
இனிவரும் வாய்புக்கள் உனக்கான காலங்கள் ..!!

Tuesday, 24 April 2012

எழுத்துகளின் பிறப்பு .......!என் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் .......
எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை .....

பத்து நிமிடங்கள் என் எழுத்துக்களை அன்பு உள்ளங்கள் .....
நீங்கள் படித்தால் போதும் ........

புரிந்து கொண்டேன் இன்று ..!!நிம்மதி தேடி இந்த பூலோகத்தில் கண்ணீருடன் அலைந்தேன் 
நான் என் வாழ்வில் கண்டதில்லை நிம்மதி ...
நிம்மதி எங்கே என்று தேடித்தேடி 
கடைசியில் உன் நினைவுகளே எனக்கு நிம்மதி அளித்தது நினைவில் நீ இருந்தால் என் நிழலும் கூட நிம்மதியை உறங்கும் ..
என்று புரிந்து கொண்டேன் இன்று ..!!


Monday, 23 April 2012

நேரம் ......!!நேரம் காட்டும் 
கருவிகள் எதுவும் 
எனக்கு பிடிக்கவில்லை 
அவன் என்னுடன் 
இருக்கையில்!!!!!! 

அந்த அரை நொடி ................


என் வாழ்வில் நீ பார்க்கும் 
அந்த அரை நொடி 
என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான 
நொடிகளாய் மாறுகின்றன என் உயீர் காதலனே ...!!!

யோசிக்க நினைக்க வில்லை ........


நிஜ காதலே பிரியும் உலகில்
விதயாசமாய் ஒரு காதல் என்னில்
நேரில் காணமல் கருப்ப சிவப்பா தெரியாமல்
ஊர்பேரை அறியாமல் விரும்ப தொடங்கி விட்டேன்
அவனின் மனதை பறி கொடுத்து விட்டேன்
முடிவு என்னாகும் என கவலை
இருவர் மனதிலும் துளியும் இல்லை
நேசம் ஒன்று போதுமென நாங்கள்
முடிவெடுத்தோம்
வெறும் பேச்சில் மட்டுமே தினம் தினம்
காதலித்தோம்
காதல் கொள்ள காரணம் அவன் குழந்தை மனம்
என் நலனில் அவனின் அக்கறை கொள்ளும்
விதமும்
தானாய் பிடித்து போக கனவினை
தொடர்ந்துவிட்டேன் ................
யாரும் நேசிக்காத ஒரு காதலை
நேசிபதால் இல்லை என் கவலை
என்னாகுமோ எனும் கவலை
ஏன் நான் அதை யோசிக்க நினைக்க வில்லை ........

பெண்ணின் மனவேதனை ...........!!!அன்று
என் தாய் பெருமையாகச் சொன்னால்,
"என் மகளுக்கு அழவே தெரியாது!"
இன்று
நான் சொல்கிறேன்,
"எனக்கு அழுவதைத் தவிர
வேறு எதுவும் தெரியாது!"

நீ என்னைப் பிரிந்ததால்
இதயத்தைக்
கல்லாக்கிக் கொண்டேன்..
ஆனாலும்,
அதில் நீ இருந்தாய்,
சிற்பமாக...

காதலித்த நாட்களே
வாழ்க்கையின்
மிக அழகான
பக்கங்கள் பலருக்கு...
ஆனால்,
அந்த பக்கங்களைக் கிழித்து,
கசக்கி எறிவதே பழக்கம்
காலத்திற்கு..

உன் நிழலாக,
என்றும் உன்னுடன் இருப்பேன் என்றேன்..
பைத்தியக்காரி நான்..
இருட்டினுள் நீ சென்றால்,
நிழல்
எப்படி உடனிருக்கும்?

"தோழியா இல்லைக் காதலியா?" என்றாய்,
இரண்டும் இல்லை,
"உன் மனைவியடா நான்!" என்றேன்..
அப்படியானால்,
இந்த பிரிவின் பெயர்,
காதல் தோல்வி அல்ல..

விவாகரத்து!

ஆம்,
இருவருக்குமே
சற்றும் உடன்பாடின்றி,
காலத்தின் கட்டளையால் ஏற்பட்ட

விவாகரத்து!!

"காட்சிப் பிழையோ?
தோற்ற மயக்கமோ??"
கவிபாட நான்
பாரதி இல்லை..
கல்லறை கட்ட
ஷா ஜகானும் இல்லை..
உன் பிரிவை எண்ணி,
அழுவதா,
உயிரை விடுவதா
என அறியாத
பேதைப் பெண்!

வாழ்வுக்கும்
சாவுக்கும்
இடையில் நடக்கும்
போராட்டம்...

"வாழ்க்கையே ஒரு
நாடக மேடை" கூறினர் அறிஞர்..
காதல் நாடகம்
இனிதே அரங்கேறியது.
முடிந்தும் போனது!

அடுத்தப் பிறவி நாடகத்திலும் நாம்
இணைய வேண்டுகிறேன்...
பிரிவில்லா நாடகமானால் மட்டும்
கூப்பிடு என்னை...

மீண்டும்
உன் பிரிவைத்
தாங்க மாட்டேன் நான்!
மறுபிறவி இருந்தால்

சந்திப்போம்!

இந்த பிறவியின் நிலை என்ன?
இந்த பிரிவிலிருந்து
விடுதலை வேண்டும்!


மீண்டும் இணைவோமா?
மதில் மேல் பூனையாக
என் காதல்!

உயிருடன் நான் இன்றும் உன்னால்......


உன் முகம் காண முடியாமல் நான் தொலைவிலே இருந்தாலும்
உன் புகைப்படத்தில் உன்னையும் உன் அன்பையும் முழுமையாய்
அறிகிறேன்.
யாருக்கும் தெரியவில்லை நான் உனக்குள்
காதல் வயப்பட்டு கலந்து கொண்டிருக்கிறேன் என்று
நிலாவையும் ரசிக்கிறேன் நான் ரசிக்கும் நிலா உன் கண்களிலும்
தென்படும் என்ற நம்பிக்கையில்
உன்னை முத்தமிட என் உதடுகள் ஏங்குகிறது
உன் கரம் பிடிக்க என் கரங்கள் ஏங்குகிறது
அந்த நாளுக்காக உன் வரவை எதிர் பார்த்து
உயிருடன் நான்
இன்றும் உன்னால்....................

இப்படிக்கு...................உன்னவள்

எதார்த்தம் அறிவோம்!


வாழ்க்கை உறங்கிக்கொண்டிருக்கிறது.
மரணம் விழித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்கும் மத்தியில்
மனிதன் கற்பனையில்
நடமாடிக்கொண்டிருக்கிறான்!!!!!

இருட்டு ............


கண்களை மூடினால் 
நம் பார்வையில் இருட்டு... 
கண்களைத் திறந்தால் 
அனைவரது பார்வையிலுமே இருட்டு !!

காதல் ..!

மெழுகே....


மெழுகே....
அழுவதை
நிறுத்து.
யாருக்கும்
தெரியாமல்
இருட்டில்
நான்
அழுக...........

நிம்மதி !!!


நிம்மதி இருந்தால் 
நிமிடம் கூட வீணாகாது 
நிம்மதி இல்லாவிட்டால் 
நிமிடம் என்ன வாழ்நாளே வீணாகி விடும்


  

மனசாட்சி

கடவளுக்கும்
மரணத்திற்கும்
மனிதர்களுக்கும்
பயந்து வாழ்வதைவிட
மனசாட்சிக்கு பயந்து வாழ்
மரணமே உன்னை
நெருங்க அஞ்சும்...!!!


 

மின்னஞ்சல் மூலம் பெற ...