அது ஒரு வெயில் காலம்...!!
சுள்லென்ற வெயிலில்
நெளிகின்ற கானலில்
காலை நனைத்துக் கொண்டு
நெடுந்தூரம் நடக்கிறேன்
சுற்றியும் வெம்மை 
கருத்த முகத்தில் 
துளிர்த்த வியர்வை
காலில் தார் சாலையின்
அனல் முத்தங்கள்
வழியில் 
நுங்கும் தர்பூஸூம்
வெள்ளரியும் எலுமிச்சைச் சாறும்
மோரும் ஜில் என்ற தண்ணீரும்...
கண்கள் இடுக்கி
கடைவீதி நோக்கி நகர்ந்தேன் 
பசியும் தாகமும் தனிந்ததும் 
ஓய்வெடுக்க கண்கள் இடத்தை தேட 
தூரத்தில் ஒரு மரத்தை கண்டது 
அங்கிருந்து மெல்ல கால்கள் 
மரத்தை நோக்கி நகர்கின்றது 
மரத்தை நெருங்கியதும் 
முதியவர் ஒருவர் 
பழஞ்சோறும் வெங்காயமும்
பசியடக்கிய குளுகுளுப்பில்
ஓய்வெடுப்பதும் 
காக்கை குருவிகள் கூட 
இரை தேடலை மாலைக்கு 
ஒத்தி வைத்து
கூடுகளில் குட்டித் தூக்கம்
போடுவது கண்டதும் 
தலையை நிமிர்த்து 
சூரியனை நோக்கி 
சுழன்று எரிகின்ற சூரியனே
நீயும் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே
என்றது மனம்...

 

 
 
 
 
 
 
 
 
 
