Ads 468x60px

..

Friday 2 August 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம்..


 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூலை மாதம் நடத்திய கவிதைப்

போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட என் கவிதை

ஆணுக்கொரு கவி பாடவா ?


காலமோ கடவுளோ சூட்டிவிட்ட
உவமை அல்லவா நீ......

இரட்டிப்பு தன்மை கொண்ட
வீரன் அல்லவா நீ......

வயதிற்கு வந்ததை அறிந்து
வாலிபத்தில் நடப்பதை புரிந்து
பெண் என்ற பிம்பத்தை ஈர்த்த
கள்வன் அல்லவா நீ......

பொறுப்பு என்ற சிப்பிக்குள் அடங்கிய
முத்தல்லவா நீ......

வீரத்தின் சிலிர்ப்பில் ஆண்மையாய்
நின்று வாழ்க்கை என்ற ஓவியத்தை
வரைந்த ஓவியன் அல்லவா நீ......

கண்ணே மணியே என்ற கற்பனை
சொற்களைக்கொண்டு பெண்மையை
கவி வடிக்கும் கவிஞன் அல்லவா நீ......

இதயத்தில் கரு சுமக்கும்
காதல் இளவரசன் அல்லவா நீ......

அவசியமில்லாமல் அழுவதில்லை
என்ற சொல்லிற்கு சொந்தக்காரன்
அல்லவா நீ......

முரட்டுத்தனம் பிடிவாதம் இவற்றின்
உடன் பிறப்பல்லவா நீ......

ஆண்களில்லா பெண்களின் உலகம்
கொடும் நரகமே என்ற அர்த்தத்திற்கு
ஏற்ற அழகிய அரக்கன் அல்லவா நீ......

பெண்ணிற்கு பெருமை சேர்க்கும்
உம்மை ஆண்மையின் அர்த்தத்தை
எம்மொழியில் நான் கவி பாட ?


அன்பு தோழி (ஹாஜிரா)
சென்னையிலிருந்து


அன்பு சகோதரி ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கும் தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பினர்களுக்கும் எனது நெஞ்ச்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.