Ads 468x60px

..

Friday, 22 November 2013

                                      இன்னும் எத்தனை நாள்..?!

                                 

                                   இன்னும் எத்தனை நாள் அடம்பிடிப்பாய் 
                               சிறு சிறு தவறுகள் செய்பவள் தான் நான் 
                    நீ நினைக்கும் அளவிற்கு செய்ய துனிந்தவலல்ல
                       கண்ணால் பார்க்கும் அனைத்தும் உண்மையாக 
                                     இருக்க வேண்டிய அவசியமில்லையே..
                      சில நேரங்களில் கண்ணால் பார்ப்பதும் பொய்யே..
                 புரியவில்லையா உனக்கு தெரியவில்லையா என் மனம் 
                           பிரிவது தான் உன் விருப்பமென்றால் சரியே 
                                  காதலை (காதலனை) நினைத்து சிந்தும் 
               கண்ணீர் போதுமே எப்-பொழுதும் நினைவுகளில் வாழ..

Thursday, 3 October 2013

                                                               உன் துணை...!!!


                                               உன் துணை தேடும் என் மனம்
                                         நீ இல்லையேல் இறக்கை உடைந்த
                                   பறவைப்போல் தவிப்பதை நீ அறிவாயோ ?

Monday, 16 September 2013


உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல்
உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது...
மறக்க நினைக்கும் தருணங்களும்
மறந்து நினைக்கும் நினைவுகளும்
மனதினில் ஊசலாடும் ஊஞ்சலானது...

நான் செய்யாததை செய்ததாய் நினைக்கிறாயே
இதன் பேர் தான் சந்தேகமா ?
பேசாததை பேசினேன் என்றாயே இதுதான்
என்மீதான உன் நம்பிக்கையா ?
உன் வெறுப்பு என்னை கொல்லுதே
என் மௌனமொழி புரியவில்லையா உனக்கு ?

என்னுள் வந்து அமர்ந்துப்பார்
என் எண்ணங்களில் மூழ்கிப்பார்
நினைவுகளை ருசித்துப்பார்
என் நிலைப்புரியும் உனக்கு...

நீ பேசாத இந்த நாட்களில்
வெறுமையை காண்கிறேன்
கடிகாரத்தின் முள் நகர்வதில்லை
வானில் நீலமில்லை
வானவில்லில் நிறமில்லை
குயிலோடு ராகமில்லை
பூக்களில் வாசமில்லை
கடலில் அலைகளில்லை
மண்ணில் ஈரமில்லை
காற்றில் அமைதி இல்லை
நிலவில் வெளிச்சமில்லை

நெஞ்ஜோடு நீ இருப்பது போல்
நிஜத்தில் என்னுடனில்லை
இத்தனை இல்லைகளுக்கு நடுவிலும்
என்னுயிர் துடிக்கின்றது..

இன்னும் நீளமாகவே
எழுத்து கண்ணீர் வடிக்க
தோன்றுகிறது ஆதலால்
நேற்றைய நாளின் மீதியிலும்
இன்றைய  நாளின் பாதியிலும்
முழுதாக மூழ்கி தொடர்வேன்
உனக்கான என்
கண்ணீரையும்..... கவியையும்......

Tuesday, 10 September 2013

                                            புரியாமல் வந்த நேசமென்பதாலோ
                                              என்னவோ என் நிலைமைப்புரிய
                                                   உன் நினைவுகள் என்னை
                                                        விட்டு பிரிவதில்லை.. 

                                                         நீ என்னை மெய்யாக
                                           காதலிக்கவில்லை என்றாலென்ன
                                   என் காதல் உண்மை என்று புரியவைக்கவே
                                உனக்கான என் எழுத்துக்களை தொடர்கிறேன்
                                         என் காதலை சுவாசிக்க வேண்டாம்
                                                              வாசிப்பாயா ??

Monday, 2 September 2013
                                                   உனை எதிர்பார்த்து ஏங்கி
                                                         கண்ணீரை சுமந்திருக்கும்
                                                  என் கண்களுக்கு என்ன
                                                       சொல்லி புரிய வைப்பேன்
                                                அது சுமக்கும் கண்ணீரே
                                                               நீதானென்று..!

நேற்று நடைபெற்ற பதிவர் சந்திப்பில்..  


இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது போட்டோக்களின் க்ளிக் க்ளிக் என்ற சப்தத்தோடு சந்தோஷங்கள் மழை சாரல் போல் அள்ளிதெளித்தது..

எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில் எதுவுமே அறியாத தெரியாத சும்மா பதிவர்ன்னு பெயரைவத்துக்கொண்டு ஏதேதோ
கிறுக்கித்தள்ளும் என்னை (  மிதிக்காமல் ) மதித்து அழைத்த
தென்றல் சசி அக்காவிற்கு  நன்றி..

Monday, 12 August 2013

உன் வியர்வைதுளி..மண் வாசனையை உணர்த்திய மழைத்துளி போல்
ஆண் வாசனையை உணர்த்தும் உன் வியர்வைதுளி
ஒவ்வொன்றும் எனக்கு சொந்தமானது அதை  கீழே
சிந்தவிடாதே அதை தாங்கும்  உரிமை எனக்குமட்டுமே உண்டு...

Saturday, 3 August 2013

சிரிக்கவா ?? ரசிக்கவா ??


நான் உனை ரசிப்பது
உனக்கு தெரியவே இமைசிமிட்டாமல்
பார்கின்ற என் ரசிப்பை
ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து சிரிக்கும்
உனை பார்த்து நான் சிரிக்கவா ?? ரசிக்கவா ??

Friday, 2 August 2013

கவினுறு கலைகள் வளர்ப்போம்..


 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூலை மாதம் நடத்திய கவிதைப்

போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட என் கவிதை

ஆணுக்கொரு கவி பாடவா ?


காலமோ கடவுளோ சூட்டிவிட்ட
உவமை அல்லவா நீ......

இரட்டிப்பு தன்மை கொண்ட
வீரன் அல்லவா நீ......

வயதிற்கு வந்ததை அறிந்து
வாலிபத்தில் நடப்பதை புரிந்து
பெண் என்ற பிம்பத்தை ஈர்த்த
கள்வன் அல்லவா நீ......

பொறுப்பு என்ற சிப்பிக்குள் அடங்கிய
முத்தல்லவா நீ......

வீரத்தின் சிலிர்ப்பில் ஆண்மையாய்
நின்று வாழ்க்கை என்ற ஓவியத்தை
வரைந்த ஓவியன் அல்லவா நீ......

கண்ணே மணியே என்ற கற்பனை
சொற்களைக்கொண்டு பெண்மையை
கவி வடிக்கும் கவிஞன் அல்லவா நீ......

இதயத்தில் கரு சுமக்கும்
காதல் இளவரசன் அல்லவா நீ......

அவசியமில்லாமல் அழுவதில்லை
என்ற சொல்லிற்கு சொந்தக்காரன்
அல்லவா நீ......

முரட்டுத்தனம் பிடிவாதம் இவற்றின்
உடன் பிறப்பல்லவா நீ......

ஆண்களில்லா பெண்களின் உலகம்
கொடும் நரகமே என்ற அர்த்தத்திற்கு
ஏற்ற அழகிய அரக்கன் அல்லவா நீ......

பெண்ணிற்கு பெருமை சேர்க்கும்
உம்மை ஆண்மையின் அர்த்தத்தை
எம்மொழியில் நான் கவி பாட ?


அன்பு தோழி (ஹாஜிரா)
சென்னையிலிருந்து


அன்பு சகோதரி ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கும் தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பினர்களுக்கும் எனது நெஞ்ச்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Thursday, 1 August 2013

2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் !


பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி

ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் வெளியீடு:

கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில்  தென்றல் சசிகலா  அவர்களின் "தென்றலின் கனவு' " கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.

(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது) 

வருகைப் பதிவு:

கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே  வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.


  -          ஆரூர் மூனா செந்தில்   
·         அஞ்சாசிங்கம் செல்வின்
·         சிவக்குமார்  மெட்ராஸ்பவன்
·         பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·         தமிழ்வாசி பிரகாஷ்  மதுரை
·         சதீஷ் சங்கவி  கோவை
·         வீடு சுரேஷ்குமார்  திருப்பூர்
·         கோகுல் மகாலிங்கம்  பாண்டிச்சேரி
·         தனபாலன் - திண்டுக்கல்

நன்கொடை:இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள்  மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து  தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து  தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)
                                                                   மகிழ்ச்சியுடன் 

                                                                                                                              நிர்வாகக் குழு

Monday, 29 July 2013

                 பயண அரைமணிநேரம்...!!!


              என் செல்கைக்கு நேரம் ஆனபின்னும்
                      செல்லாமல் தினமும் அடுத்த
                   பேருந்திற்காக காத்திருக்கேன்
 காரணமின்றி உன்னோடு சேர்ந்து பயணிக்க..
        பேருந்தில் எத்தனை பேர் இருந்தாலும்
 ஏனோ என்னுள் உன் மூச்சுக்காற்றை மட்டும்
              நான் சுவாசிப்பது போன்ற உணர்வு..
            காரணமின்றி உன்னை பார்கிறேன்..
   காரணமின்றி உன்னோடு பேச விரும்புகிறேன்
காரணமின்றி சேர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறேன்..
காரணமின்றி நீ அமர்ந்திருக்கும் இடப்பக்கம் நானும்
                     அமர ஆசைப்படுகிறேனே..
              நான் ஜன்னல் ஓரம் வலப்பக்கத்தில்
              அமர்ந்திருந்தும் கவனம் சிதறாமல்
                     என் பார்வை நீ அமர்ந்திருக்கும்
               இடப்பக்கமே பார்க்கின்றனவே..
 பயணிக்கும் இந்த 30 நிமிடம் சிறு மனதுக்குள்ளே
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
                          நான் எப்படி சமாளிப்பேன்
                       இந்த அரை மணி நேரத்தை ?

Thursday, 25 July 2013

                                     நினைவுகள்...                                                    சுட்டெரிக்கும் சில நாட்கள்
                                                               வெறுமையான
                                                                 பல இரவுகள்
                                                       இவைகளுக்கிடையில்
                                                             சில பல நாட்கள்
                                               மழை தூரலாய் உன் நினைவுகள்...

Friday, 19 July 2013


                       !...ஸ்வரங்கள்..!


               வஞ்சம் கொண்டோர்போல 
          என் மேல் வன்மம் கொண்டாயோ..?
 நானோ உன்னை கம்பிகளுக்குள் சிறைப்பட்ட 
            ஸ்வரங்கள் போல் உணர்கிறேன்..
     சப்தமில்லா ஸ்வரங்கள் என்று தெரிந்தும்
              உன்னுள் சப்தத்தை தேடுகிறேன்..
       எண்ணிலடங்கா ஸ்வரங்களை கேட்டும் 
          புது ஸ்வரங்கள் உன்னில் கேட்கிறேன்..
          ஸ்வரங்களும்,ராகங்களும் சேர்த்து 
                  உன்னில் காண்கிறேன்..
                            மொத்ததில் 
              மௌனத்தில் மயக்கும் சங்கீதம் 
                       உன்னில் கண்டேன்..
                               அதை கேட்ட 
                  குயில்களும்,குருவிகளும் 
         கூனிக்குறுகி தோற்றுப்போகின்றன...

Monday, 8 July 2013

மடல் படித்தேன்..!
காற்றோடு கலந்த காதலை
காற்றாலையை தூதுவிட்ட
உன் அன்பை சுவாசித்த மறு நொடி
அக்காற்றோடு என் அன்பையும்
கலந்து முகம் கானா உன்னை
முத்தமிட்டு மார்போடு அணைக்க
தவிப்போடு வருகிறேன்..

Thursday, 20 June 2013

                                                      உன்னால் என் நிலை... !!
                       எழுதா மனநிலையை தருகின்ற உன்னால்
                            குறையாய் குப்பையாய் கிடைக்கும்
                        என் எழுத்துக்களை எப்படிக்கோர்ப்பேன்?
                      வலிகளும் வழிகளும் நிரம்பிய பாதையில்
                                          எப்படி பயணிப்பேன் ?
                           
                              வலிகளை மறக்கும் வேளையில்
                          சுமைகளை தந்தால் எப்படி சுமப்பேன் ?
                             பெருங்கோபங்களை நான் எப்படி
                                        எழுத்தில் புதைப்பேன் ?
                         
                        இடி இடித்து மிரட்டி  பொழியவைக்கும்
                             மழையைப்போல் நான் ஆனேன்..
                              நான் உட்கொள்ளும் ஆகாரமே
                                   கடும் விஷமாக மாறியதே...
                                 
                                    வலைக்குள் சிக்கிய நான்
                                 இனி மீள்வதே சாபமாகியதே...
                  ஓடியொளிந்து வேட்டையாடும் விலங்கிற்கு
                       உணவாய் இன்று என் நிலை ஆனதே...!!!

Tuesday, 4 June 2013

அது ஒரு வெயில் காலம்...!!
சுள்லென்ற வெயிலில்
நெளிகின்ற கானலில்
காலை நனைத்துக் கொண்டு
நெடுந்தூரம் நடக்கிறேன்

சுற்றியும் வெம்மை 
கருத்த முகத்தில் 
துளிர்த்த வியர்வை
காலில் தார் சாலையின்
அனல் முத்தங்கள்

வழியில் 
நுங்கும் தர்பூஸூம்
வெள்ளரியும் எலுமிச்சைச் சாறும்
மோரும் ஜில் என்ற தண்ணீரும்...

கண்கள் இடுக்கி
கடைவீதி நோக்கி நகர்ந்தேன் 
பசியும் தாகமும் தனிந்ததும் 
ஓய்வெடுக்க கண்கள் இடத்தை தேட 

தூரத்தில் ஒரு மரத்தை கண்டது 
அங்கிருந்து மெல்ல கால்கள் 
மரத்தை நோக்கி நகர்கின்றது 

மரத்தை நெருங்கியதும் 
முதியவர் ஒருவர் 
பழஞ்சோறும் வெங்காயமும்
பசியடக்கிய குளுகுளுப்பில்
ஓய்வெடுப்பதும் 

காக்கை குருவிகள் கூட 
இரை தேடலை மாலைக்கு 
ஒத்தி வைத்து
கூடுகளில் குட்டித் தூக்கம்
போடுவது கண்டதும் 

தலையை நிமிர்த்து 
சூரியனை நோக்கி 
சுழன்று எரிகின்ற சூரியனே
நீயும் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே
என்றது மனம்...

 

மின்னஞ்சல் மூலம் பெற ...