Ads 468x60px

..

Wednesday, 5 November 2014


என் பிரியமானவனே...!



இரண்டாவது முறையும்
காதல் வருமா என்று
ஆச்சர்யப்பட்டு கேட்ட
என்னையே இன்னொருமுறை
காதலிக்க வைத்தவனே...
பார்க்கும் காட்சிகளெல்லாம்
ரசிக்க செய்தாய்
தேவையில்லாமல் தேங்கி
கிடந்த அன்பை உருவி
ஒவ்வொரு வினாடியும்
என் மனப்பரப்பில்
ஏக்கங்களை விதைத்தாய்
என் பிரியமானவனே...
இன்னும் பல எண்ணிலடங்கா
சொல்லத்தெரியாத இன்பத்தில்
யாரும் நுழையமுடியா
அணைப்புடன் நான்..

Wednesday, 16 July 2014





எத்தனையோ பேர்
பயணிக்கும் பேருந்தில்
உன்னுடன் நானும்
ஒருத்தியாக பயணிக்கிறேன்

யாரோ ஒருவரிடம் பேசி
உறவாகும் பயணிகளின்
மத்தியில் தினமும்
உனை பார்க்கும் நான் மட்டும்

இன்னமும் அந்நியப்பட்டே நிற்கிறேன்..!  

Wednesday, 28 May 2014



                                                         இதயம் ஓசை எழுப்ப 
                                                             நினைவுகள் கவி பாட
                                                       கண்ணீர் வடிக்கிறேன் 
                                                               உந்தன் பிரிவால்..