Ads 468x60px

..

Friday, 30 November 2012

பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் ...



ஒருவனை விரும்பி இருந்தால்
சீதையாக வாழ்ந்திருப்பேன் ...
பலரை விரும்பியதால்
சிதைக்கப்பட்டேன் ...

உறவுகளும் ஏற்கவில்லை...
விரும்பித்தொட்டவனும் ஏற்கவில்லை...

பண்பாடு கலாச்சாரம் என்பது
வார்த்தையில் மட்டுமில்லாமல்
வாழ்க்கையிலும் இருந்திருந்தால்
பாவப்பட்ட நோய் தாக்கி இருக்காது ....?!

Thursday, 22 November 2012

ஏக்கம் ....!!



இறைவனிடம் பாசத்தை கேட்டேன்
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான்
பாசத்தை கடைசி வரைக்கும் அனுபவிக்க
உன்னை காதலித்தேன் அதை
உன்னிடம் மறைத்து வைத்தேன்
காதல் கவிதை எல்லாம் தனியே
புலம்பி வைத்தேன் கனவின் தொல்லை
என்று உறக்கத்தை விட்டேன்
நாளை உன்னை பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை அறியாமல்
இரவு இரவெல்லாம் விடியாமல்
நீண்டுகொண்டே இருக்கிறது....!?