Ads 468x60px

..

Friday, 31 May 2013

    பசி

*************


பசி....
ஒவ்வொரு மனிதனின்
சக்திக்கான தேடல்..

உணவு தேடலை ஆரம்பிக்கும் 
போது மனிதன் செயல்ப்பாட்டில் 
பல மாற்றங்கள்..

பிடித்த உணவு ,
சத்தான உணவு ,
ஆடம்பர உணவு , 

பல உணவுகளில் 
ஒரு உணவுக்கான 
தேர்வு...

இந்த தேர்வு 
பணமுள்ளவனிடம் 
மட்டும் சாத்தியமாகும் ..

ஒரு வேளை உணவிற்குத்
தவமிருப்பவர்களின்
வாழ்க்கையோ ??? 

கேள்விக்குறியாக...!

பசி பட்டினியால் 
அவல சாவை 
தழுவிக்கொள்ளும் மக்கள் 

உலகின் ஒரு மூலையில் 
இன்றும் வாழ்ந்துகொண்டு 
தான் இருக்கிறார்கள் ..

பசிப்பிணி என்ற பாவி 
பிடித்துகொண்டு 
வாழ்வின் வேரருக்கின்றது...

உன்ன உணவின்றி மறித்து 
போகும் இந்த உன்னத வரம் 
அழிந்து போகட்டும்...

இன்றைய சூழ்நிலையில் 
மனிதர்களே மனித இனத்தை 
காக்கவேண்டும் ...

நம் மனித இனத்துக்கு 
உயிர்த்துளி வழங்குவோம் 
மாற்றலாம் உலகத்தை...

--------------------------------------------------------------------------------

Saturday, 18 May 2013


                                                  
                                                    
                                                       மௌனத்தை விதையாக்கி...
                                                              மூச்சை வேராக்கி..
                                                           சுவாசிக்க காற்று தேடி...
                                                          கண்களை சிலையாக்கி...
                                                            நிலவை தரையிறக்கி..
                                                          காதலோடு இசைந்தாடி...
                                                           தேன் எடுக்க தீ மூட்டி..
                                                     மூச்சடைக்க முகம் மறைத்து...
                                                         சிறைக்குள் சிறுகச் சிறுக
                                                                  சிறைப்படுத்தி...
                                                           பாலூறிய நிலம் போல்
                                                        பசியாற்றிய...உனக்கொரு
                                                            கவி பாடாமல் என்
                                                      பெண்மை நிறைவுறுமோ..!

Tuesday, 14 May 2013

                                                                   பிச்சை..?!



                                  பிச்சை எடுப்பவர்களில் அதிக பரிதாபமும்
                                      எரிச்சலும் உண்டாவது சிறுவர்களாலே
                      அய்யா,அம்மா என்று  அழும் முகத்துடன் கரம் நீட்டியபடி
                          சின்னஞ் சிறு சிட்டுக்கள் படிக்க வேண்டிய வயதில்
                              ஏன் பிச்சை கரங்கள் நீட்ட வேண்டும் இவர்கள் ?
                          உயர்கல்வி படிக்க இச்சை இருக்காதா இவர்களுக்கு ?
                                   கந்தக மூச்சோடு ஆசை கனவோடு வாழும்
                                      இவர்கள் பிச்சை எடுக்க யாரிட்ட சாபம்..?
                            சிறகுகள் கிழிகப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் போல்
                                                   இன்று இவர்களின் நிலை...!!!              

Saturday, 4 May 2013

சிசுவை கொல்வது சரிதானா ?

************************************



தாய்மை என்பது ஒவ்வொரு
பெண்ணுக்கும் ஏற்படும்
ஓர் அற்புதமான அனுபவம்.
இதை உனரா சிலர் சிசுவை
அழிப்பது சரியா ?

தன் தாயானவள்
தன்னை அன்பால் அனைப்பால்
கன்னத்தில் முத்தமிடுவாள்
எனக் காத்திருந்த சிசுவின்
ஆசை நிராகரிப்பது சரியா ?

எத்தனையோ குற்றவாளிகள்
இப்பூமியில் இருக்க
செய்யாத குற்றத்திற்கு
பூமிக்குவரா சிசுவிற்கு
தண்டனை எதற்கு ?

சில நிமிட ஆசைக்கு
காதல் என்ற பெயரில்
ரகசிய கருவில் உருவான
பச்சிளம் பூக்களை நாளைய
வீரர்களை கவிஞர்களை

கள்ளிப்பால் கொடுத்தும்
வித விதமான கலர் கலரான
மாத்திரைகள் உண்டும்
கலைக்கப்படுவது சரியா ?
கலைக்கப்படுவது நியாயமா ?

கருக்கலைப்பே கூடாது
அது ஓர் உயிர் பாவம்
எத்தனையோ பேர்
குழந்தை வரம் கிடைக்காமல்
குழந்தை தொட்டில் மட்டுமே
பார்த்து அழுதுகொண்டும்

பார்பவர்கள் எல்லாம் ஏதேனும்
விசேஷம் உண்டா என்று
கேட்கும் பொழுது
பதில் சொல்ல முடியாமல்
தவிக்கும் அப்பெண்ணின்
மனம் நீ அறிவாயா ??????



என் வாழ்க்கை பயணம்....!!




வார்த்தைகள் இல்லாமல் 
பேசிக்கொண்டிருகின்றேன்..
கண்கள் இல்லாமல் 
ரசித்துக்கொண்டிருக்கின்றேன்..
சுவாசம் இல்லாமல் 
சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்..

வாழ்வில் எண்ணில் அடங்கா 
சிறு சிறு ஆசைகளை எண்ணி எண்ணி 
மண்ணில் புதைத்தும் விட்டேன்...
இரக்கமில்லாமல் மனதை குத்தி 
செல்லும் மனிதர்களின் மனம் அறிந்து 
மனம் உடைந்தும் போனேன்...

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்ற ஓராயிரம் உறவுகள்
பற்றி சிந்திக்கும் வேளையில் பயண உறவுகள் 
மறைந்து போவதும் தெரிந்துகொண்டேன்...

ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு பாதையில் 
எப்பாதை எனக்குரியது என்று "தடு"மாறி 
"தடம்"மாறி எங்கு பயணிக்கின்றேன் 
என்று தெரியாமல் என் பயணம் தொடர்கிறது....