- உலகில் உயர்ந்த உறவுகளில்
சிறந்தது நட்பு ..
என்றும் புனிதமானது
தான் நட்பு ...
எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ ...
நட்பு என்னும் தோட்டத்தில் ராஜா நீ ...
நீ நடக்கும் தூரமெல்லம் நானும்
வருவேன்
நிழலாக அல்ல உன் நண்பியாக ...
தந்தையின் அன்பு உன்னிடம் கண்டேன் ..
என் இடர் கண்டு உன் இதயம்
துடிக்கக்கண்டேன் ...
வாழ்கை என்கிற பெருங்கடலை கடந்திட
நீ ஒரு துடுப்பாய் இருக்கிறாய் ..
தோல்வி காண்கையில் தோள் குடுத்து
தூண் போன்று நிற்கின்றாய் ...
என் பாதையில் இருட்டென்று
தெரிந்தால்...
இரவிலும் வெளிச்சம் வரும் உன்னால் ...
பிறக்கும் பொழுது நண்பன் என்று
யாருமில்லை எனக்கு...
இறக்கும் பொழுது நண்பனை தவிர
யாருமில்லை என்ற நிலை எனக்கு ..
என் வெற்றி என் கண்ணீர் என என்
அத்தனை நிகழ்வுகளிலும் என்னுடன்
எனக்காய் எனதாய் இருக்கும் ஒரு உறவு
நீயே ...
Tuesday, 29 May 2012
இணைந்திருப்பேன் என்றும் உன்னுடன் ...
Subscribe to:
Posts (Atom)