Ads 468x60px

..

Saturday, 4 May 2013



என் வாழ்க்கை பயணம்....!!




வார்த்தைகள் இல்லாமல் 
பேசிக்கொண்டிருகின்றேன்..
கண்கள் இல்லாமல் 
ரசித்துக்கொண்டிருக்கின்றேன்..
சுவாசம் இல்லாமல் 
சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்..

வாழ்வில் எண்ணில் அடங்கா 
சிறு சிறு ஆசைகளை எண்ணி எண்ணி 
மண்ணில் புதைத்தும் விட்டேன்...
இரக்கமில்லாமல் மனதை குத்தி 
செல்லும் மனிதர்களின் மனம் அறிந்து 
மனம் உடைந்தும் போனேன்...

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்ற ஓராயிரம் உறவுகள்
பற்றி சிந்திக்கும் வேளையில் பயண உறவுகள் 
மறைந்து போவதும் தெரிந்துகொண்டேன்...

ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு பாதையில் 
எப்பாதை எனக்குரியது என்று "தடு"மாறி 
"தடம்"மாறி எங்கு பயணிக்கின்றேன் 
என்று தெரியாமல் என் பயணம் தொடர்கிறது....