உன்னால் என் நிலை... !!
எழுதா மனநிலையை தருகின்ற உன்னால்
குறையாய் குப்பையாய் கிடைக்கும்
என் எழுத்துக்களை எப்படிக்கோர்ப்பேன்?
வலிகளும் வழிகளும் நிரம்பிய பாதையில்
எப்படி பயணிப்பேன் ?
வலிகளை மறக்கும் வேளையில்
சுமைகளை தந்தால் எப்படி சுமப்பேன் ?
பெருங்கோபங்களை நான் எப்படி
எழுத்தில் புதைப்பேன் ?
இடி இடித்து மிரட்டி பொழியவைக்கும்
மழையைப்போல் நான் ஆனேன்..
நான் உட்கொள்ளும் ஆகாரமே
கடும் விஷமாக மாறியதே...
வலைக்குள் சிக்கிய நான்
இனி மீள்வதே சாபமாகியதே...
ஓடியொளிந்து வேட்டையாடும் விலங்கிற்கு
உணவாய் இன்று என் நிலை ஆனதே...!!!